சிங்கம் சிங்கிளா தான் வரும்: செஃப் வெங்கடேஷ் பட் வீடியோ வைரல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக இருந்த வெங்கடேஷ் பட் அந்த நிகழ்ச்சிகளில் இருந்து விலகி விட்டதாக கூறிய நிலையில் தற்போது தன்னுடைய புதிய பயணம் குறித்த வீடியோவை வெளியிட்டு உள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி நான்கு சீசன்கள் முடிவடைந்து விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்க உள்ளது என்பதும் இது குறித்த ப்ரோமோ வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
கடந்த நான்கு சீசனிலும் இந்த நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு சென்றவர்களில் ஒருவர் வெங்கடேஷ் பட் என்பதும் அவர் ஐந்தாவது சீசனில் திடீரென விலகி விட்டதாக கூறியது பார்வையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் அவர் வேறொரு சேனலில் புதிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியதாக கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்
அந்த வீடியோவில் அவர் ’சிங்கம் சிங்கிளாத்தான் வரும், நீங்க சொல்லிட்டீங்க.. நாங்க ஆரம்பிக்கிறோம்’ என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளதை அடுத்து அவர் தனது புதிய பயணத்தை ஆரம்பித்து விட்டார் என்பது இந்த வீடியோவில் இருந்து தெரிய வருகிறது. இருப்பினும் அவரது அடுத்த பிராஜெக்ட் என்ன? எந்த சேனலுக்காக அவர் பணிபுரிய போகிறார்? என்பதை எல்லாம் அடுத்து வரும் நாட்களில் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த வீடியோவின் பின்னணியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ படத்தின் ‘தனிவழி’ பாடல் ஒலிக்கும் நிலையில் இந்த வீடியோவுக்கு லைக் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com