பொண்டாட்டியிடம் அடி வாங்குபவரா வெங்கடேஷ் பட்.. வைரலாகும் ரொமான்ஸ் வீடியோ..!

  • IndiaGlitz, [Tuesday,May 07 2024]

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான செஃப் வெங்கடேஷ் பட் அந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் இருந்து விலகி சன் டிவியில் உருவாக இருக்கும் புதிய நிகழ்ச்சியான ’டாப் குக்கு டூப் குக்கு’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சி குறித்த முன்னோட்ட வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது என்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி வெங்கடேஷ் பட் அவர்களை வேற லெவலுக்கு அழைத்துச் செல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதுமட்டுமின்றி விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோனிஷா, ஜிபி முத்து, பரத் உள்பட சிலரையும் அவர் அழைத்துக் கொண்டு சென்று இருப்பதால் அந்த நிகழ்ச்சி சூப்பர் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் செஃப் வெங்கடேஷ் பட் சமூக வலைதளத்தில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பிரபலம் என்பதும் ஒரு மில்லியனுக்கு மேல் அவருக்கு ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது மனைவியுடன் சுற்றுலா சென்ற வீடியோவை பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோவின் கேப்ஷனாக ‘எவ்வளவு சண்டை போட்டாலும், பொண்டாட்டி அடிச்சாலும், அதை எல்லாம் தாங்கி, சிரிக்கிறவன் தான் நல்ல புருஷன்’ என்று பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து வெங்கடேஷ் பட் பொண்டாட்டி இடம் அடி வாங்குவாரா? என்பது உள்பட பல்வேறு கமெண்ட் பதிவாகி வருகிறது என்றாலும் இந்த ரொமான்ஸ் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய்யின் இன்னொரு சூப்பர் ஹிட் பட ரீரிலீஸ்? பக்காவாக திட்டமிடும் கலைப்புலி தாணு..!

விஜய், த்ரிஷா நடித்த 'கில்லி' திரைப்படம் சமீபத்தில் ரீரிலீஸ் செய்யப்பட்டது என்பதும் இந்த படம் சுமார் 30 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்து என்பதையும்

நடிகர் கிங்காங் மகள் பிளஸ் 2வில் எவ்வளவு மதிப்பெண் தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்..!

நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவ மாணவிகள் மிகுந்த ஆர்வத்தில் தேர்வு முடிவுகளை பார்த்து வந்தனர் என்பதும் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளை 94 சதவீதத்திற்கும் அதிகமானோர்

வெளியாகிறது சிம்பு கேரக்டர் வீடியோ.. கமல் வெளியிட்ட 'தக்லைஃப்' வீடியோவில் ட்விஸ்ட்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக்லைஃப்' படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் நாளை

'அரண்மனை' சீரீஸ் போதும்.. சூப்பர் ஹிட் படத்தின் அடுத்த பாகத்தை உருவாக்கும் சுந்தர் சி..!

சுந்தர் சி இயக்கத்தில் உருவான 'அரண்மனை' படத்தின் நான்காம் பாகம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் இந்த படம் 3 நாட்களில் உலகம் முழுவதும் சுமார் 34 கோடி வசூல் செய்து

'தக்லைஃப்' படப்பிடிப்பு நடைபெறுவது இந்த புகழ்பெற்ற கோவிலிலா? இணையத்தில் கசிந்த புகைப்படம்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக்லைஃப்' படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில்