மணிமேகலை விலகியதற்கு இதுதான் காரணம்.. உண்மையை உடைத்த செஃப் தாமு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிலிருந்து மணிமேகலை விலகியது அந்த நிகழ்ச்சியின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்த நிலையில் இந்த நிகழ்ச்சியிலிருந்து அவர் ஏன் விலகினார் என்பது குறித்து இன்னும் உண்மையான தகவல் வெளிவரவில்லை.
இந்த நிலையில் தனது சொந்த ஊரில் வாங்கி போட்ட நிலத்தில் பண்ணை வீடு கட்டப் போவதாக மணிமேகலை தனது கணவர் உசேன் உடன் பதிவு செய்த புகைப்படங்கள் வைரலாகின. வீடு கட்ட போவதால் தான் அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி இருந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான செஃப் தாமு சமீபத்தில் அளித்த பேட்டியில் ’மணிமேகலை விலகியது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். ’குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பொருத்தவரை மணிமேகலையின் காமெடியை நான் மிஸ் செய்கிறேன், அவர் எனக்கு மகள் போன்றவர், இந்த நிகழ்ச்சியை விட்டு அவர் போனது எனக்கு மட்டுமின்றி, எங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய இழப்புதான்.
ஆனால் அதே நேரத்தில் அவர் விரும்பி எடுத்த முடிவு இது, அடுத்ததாக தொகுப்பாளினி உள்பட ஒரு சில விஷயங்களில் கவனத்தை செலுத்த இருக்கிறார் என நினைக்கிறேன், அவரது எதிர்காலம் கருதி எடுத்த முடிவுதான் இது’ என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments