ஊரடங்கிற்கு பின் இதை முக்கியமாக கவனியுங்கள்: யோகிபாபு அறிவுரை
- IndiaGlitz, [Friday,April 17 2020]
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து அலுவலகங்கள், கடைகள், தொழிற்சாலைகள் ஆகியவை மூடப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின்னர் ஒருசில அலுவலகங்களும், மே 3ஆம் தேதிக்கு பின்னர் அனைத்து அலுவலகங்கள் மற்றும் கடைகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக கடைகள், அலுவலகங்கள், உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டு இருப்பதால் மீண்டும் அவற்றை திறக்கப்படும்போது ஒரு சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று நடிகர் யோகிபாபு தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்
ஊரடங்கு உத்தரவுக்கு பின் மீண்டும் அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு செல்பவர்கள் தயவுசெய்து ஒன்றை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் அலுவலகம் மற்றும் தொழிற்சாலை மின் இணைப்பு சரியாக வேலை செய்கிறதா? என்று அதனை ஆன் செய்வதற்குமுன் சோதனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள். அலுவலகத்திற்குள் நுழைந்தவுடன் சுவிட்சை ஆன் செய்ய வேண்டாம் ஏனெனில் கடந்த ஒரு மாதமாக தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளதால் பூனை மற்றும் எலிகள் மின் வயர்களை சேதப்படுத்தி இருக்க அதிக வாய்ப்புகள் உண்டு. இதனால் நீங்கள் திடீரென சுவிட்சை ஆன் செய்தால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே மின் வயர்களை சோதனை செய்தபின்னர் அதை ஆன் செய்யுங்கள் என்று யோகிபாபு அறிவுரை கூறியுள்ளார்.
யோகிபாபுவின் இந்த அறிவுரைக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே சமீபத்தில் மூடப்பட்ட தியேட்டர் ஒன்றை திறந்து பார்த்தபோது அதில் இருந்த அனைத்து சீட்டுக்களையும் எலிகள் கடித்து குதறி இருந்ததாக வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். எனவே யோகிபாபுவின் அறிவுரையை அனைவரும் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Things to do for RESTARTING - Office / Factory after Lock-down:
— Yogi Babu (@yogibabu_offl) April 17, 2020
Check the Electricity connection, whether its proper in all the places. Don't turn on the electricity straight away, there may be some CAT's or RAT's which might damaged the WIRES.