செக் மோசடி....சரத், ராதிகா-வுக்கு ஓராண்டு சிறை தண்டனை....!

நடிகர்கள் ராதிகா,சரத் குமார் தம்பதிக்கு, செக் மோசடி காரணமாக ஓராண்டு சிறை தண்டனை விதிக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்தில், சரத்குமார் மற்றும் ராதிகா பங்குதாரராக இருக்கிறார்கள். இந்நிறுவனம் சென்ற 2014-இல் விக்ரம் பிரபு மற்றும் கீர்த்திசுரேஷை வைத்து இது என்ன மாயம் என்ற படத்தை தயாரிக்க, திட்டமிட்டு இதற்கான தொகையை ரேடியான்ஸ் நிறுவனத்திடமிருந்து பெற்றிருந்தது.

2015-க்குள் பணத்தை திருப்பித்தருவதாக கூறிய மேஜிக் பிரேம்ஸ், பணத்தை தரவில்லை. இந்த பணத்தை வைத்து பாம்புசட்டை என்ற மற்றொரு படத்தை தயாரித்துள்ளனது இந்நிறுவனம். பின்பு மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் மூலம் ரேடியான்ஸ்க்கு செக் ஒன்று தரப்பட்டுள்ளது. இந்த காசோலை பவுன்ஸ் ஆனதால், ரெடியான்ஸ் நிறுவனம் சரத்குமார் மற்றும் ராதிகா மீது வழக்கை தொடுத்துள்ளது.

சரத்குமார் மீது 7 வழக்குகளும், ராதிகா மற்றும் ஸ்டீபன் மீது 2 வழக்குகளும் தொடரப்பட்டது. இதுகுறித்து ராதிகாசரத்குமார் தரப்பில் கூறியதாவது, நாங்கள் மோசடி செய்யவில்லை, வட்டி அதிகமாக கேட்டதால் எங்களால் பணத்தை செலுத்தமுடியவில்லை என்று கூறி வாதிடப்பட்டது. ஆனால் செக் மோசடி என்பது அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதால், வழக்கிற்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மூவரும் குற்றவாளிகள் என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தது. 7 வழக்குகள் உள்ள சரத்குமாருக்கு 1 வருடமும், 2 வழக்குகள் உள்ள ராதிகா சரத்குமாருக்கு 1 வருடம் என்று கூறி தீர்ப்பு வழங்கப்பட்டது.

இச்சிறை தண்டனை 3 வருடங்களுக்கு உட்பட்டது என்பதால், விதிமுறைப்படி மேல்முறையீடு செய்யும் வரை, தங்கள் தண்டனையை நிறுத்தி வைக்கவேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் கூறப்பட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று மாலைக்குள் முடிவுகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.