பிரபல இயக்குனர் கே.சுபாஷ் காலமானார்.

  • IndiaGlitz, [Wednesday,November 23 2016]

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் கே.சுபாஷ் காலமானர். அவரது மறைவிற்கு தமிழ் திரையுலக கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மணிரத்னம் அவர்களிடம் உதவியாளராக இருந்த கே.சுபாஷ் பிரபு, அமலா நடித்த 'கலியுகம்' படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். அதன்பின்னர் விஜயகாந்த் நடிப்ப்பில் மணிரத்னம் தயாரிப்பில் உருவான 'சத்ரியன் என்ற வெற்றி படத்தை இயக்கினார்.
சத்யராஜின் பிரம்மா, பிரபு நடித்த உத்தமபுருஷன்', பிரபுதேவாவின் 'ஏழையில் சிரிப்பில், '123' மற்றும் பார்த்திபன் நடித்த 'சுபாஷ் உள்பட பல வெற்றி படங்களை சுபாஷ் இயக்கியுள்ளார். மேலும் தல அஜித் நடித்த 'பவித்ரா' மற்றும் 'நேசம்' ஆகிய படங்களும் இவர் இயக்கிய படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில வருடங்களுக்கு முன் வெளிவந்த ஷாருக்கானின் சூப்பர் ஹிட் படமான 'சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் கதை, திரைக்கதை எழுதிய பெருமையும் கே.சுபாஷ் அவர்களுக்கு உண்டு.
கே.சுபாஷின் மறைவிற்கு Indiaglitz இரங்கல் தெரிவித்து கொள்கிறது. மேலும் அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்வோம்.

More News

'பாகுபலி 2' வீடியோவை கசியவிட்ட வீடியோ எடிட்டர் கைது

இந்தியாவின் பிரமாண்டமான திரைப்படங்களில் ஒன்றாகிய 'பாகுபலி' படத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து....

கருப்புப்பண உலகின் ஒரே வெள்ளை கலைஞன் கமல். ஆஸ்கார் ரவிச்சந்திரன்

மத்திய அரசின் ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பு பொதுமக்களை மட்டுமின்றி திரையுலகிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது...

நட்டி நட்ராஜூக்கு ஓகே ஆன 'போங்கு'

சதுரங்க வேட்டை' புகழ் நட்டி நட்ராஜ் நடித்த 'போங்கு' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிந்து ரிலீஸ்...

ரூ.2000 நோட்டு குறித்து வாட்ஸ் அப்பில் பரவும் பயங்கர வதந்தி

பாரத பிரதமர் நரேந்திரமோடி கடந்த 8ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று அறிவித்தார். அதன்பின்னர் இந்தியாவில் ரூ.2000 நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது...

ஆசிய அளவில் 2வது இடத்தை பிடித்த ரஜினியின் '2.0'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் கடந்த ஞாயிறு அன்று மும்பையில் பிரமாண்டமான...