ரஜினியின் கேரக்டருக்கு மாறிய கமல் சகோதரர்

  • IndiaGlitz, [Wednesday,August 24 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படம் கடந்த மாதம் வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியது அனைவரும் அறிந்ததே. ரஜினி இந்த படத்தில் 'நல்ல டான்' ஆக நடித்திருந்தார். இந்நிலையில் இதே கேரக்டரில் கமல்ஹாசனின் சகோதரரும், தேசியவிருது பெற்ற நடிகருமான சாருஹாசன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
அறிமுக இயக்குனர் விஜய்ஸ்ரீ சமீபத்தில் சாருஹாசனை சந்தித்து டான் கதை ஒன்றை கூறியதாகவும், இந்த படத்தில் டான் ஆக நடிக்கவேண்டும் என சாருஹாசனிடம் அவர் கேட்டுக்கொண்டதாகவும் தெரிகிறது.
86 வயது தாத்தாவாக இருக்கும் நான் தாதா கேரக்டருக்கு பொருந்துவேனா? என்று சாருஹாசன் தயங்கியதாகவும், இந்த கேரக்டரை உங்களை மனதில் வைத்துதான் எழுதினேன் என்று இயக்குனர் அவருக்கு விளக்கமளித்ததாகவும் கடைசியில் இந்த படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தின் டேக்லைன் 'நோ பவுடர் நோ மேக்கப்' என்பதுதான் என்றும் இந்த படத்தில் நடிக்கும் சாருஹாசன் உள்பட எந்த நடிகருக்கும் மேக்கப் இல்லை என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார். ராஜா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு பிரகாஷ் நிக்கி இசையமைக்கின்றார்.

More News

அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் தனுஷ் நாயகி

கோலிவுட் திரையுலகில் அறிமுக நடிகைகளாக இருந்தாலும் சீனியர் நடிகையாக இருந்தாலும் அவர்களது ஒரே குறிக்கோள் அஜித்துடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும்...

விக்ரம் மீதான குற்றச்சாட்டுக்கு FIA விளக்கம் : நியூயார்க் விழாவில் நடந்தது என்ன?

அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் நகரில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் சீயான் விக்ரம் ஒரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்...

விக்ரம்பிரபுவின் 'வீரசிவாஜி' ரிலீஸ் தேதி

விக்ரம்பிரபு நடித்த 'வாஹா' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அவர் நடித்த முந்தைய படமான 'இது என்ன மாயம்'...

'பாகுபலி', 'கபாலி'க்கு அடுத்த இடத்தை பிடித்தது 'விஜய் 60'

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 60' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பரில் முடிந்துவிடும்...

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய அறிக்கையின் முழுவிபரம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பின்னர் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான 'செவாலியே' விருதை வென்ற கமல்ஹாசனுக்கு எட்டு திசைகளில் இருந்தும் பாராட்டுக்கள்...