காரணமில்லாமல் இந்த புகழ் வருமா? ரஜினி குறித்து கமலுக்கு நெருக்கமானவர்
Thursday, July 21, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தொழில் முறையில் வேண்டுமானால் போட்டியாளர்களாக இருக்கலாம். ஆனால் இருவரும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமின்றி குடும்ப அளவிலும் நெருக்கமானவர்கள் என்பது பல சம்பவங்களில் வெளிப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை உலகம் முழுவதும் ரஜினியின் 'கபாலி' ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் திரையுலகினர் பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் ரஜினி தன் மீது வைத்துள்ள பாசம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
'எனக்கு தீபாவளி போன்ற மத பண்டிகையில் நம்பிக்கையில்லை... ஆனால் 25 ஆண்டுகளுக்கு மேலாக ரஜினி எனக்கும் என் மனைவிக்கும் துணிமணி தீபாவளிக்கு அனுப்புகிறார் .... அவரை ஏன் நான் குறைத்து பேசவேண்டும் ...? காராணமில்லாமல் புகழ் வருவதும் ஆதாயமில்லாமல் அய்யங்கார் ஆற்றோடு போவதும் நடக்காத காரியங்கள்: இதுதான் சாருஹாசனின் பதிவு
25 வருடங்களுக்கு முன் வந்த மணிரத்னம் இயக்கிய 'தளபதி' படத்தில் ரஜினியும், சாருஹாசனும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
- logoutLogout
Login to post comment