உலக கழிவறை தின விழிப்புணர்வு ஊர்வலத்தில் பிரபல நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று உலக கழிவறை நாள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்ட நிலையில் கழிவறையின் தேவை குறித்த விழிப்புணர்வை பல சமூக அமைப்புகள் ஏற்படுத்தி வந்தன. இந்நிலையில் இந்த விழிப்புணர்வில் திரையுலகை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக சிம்புவின் 'காதல் அழிவதில்லை' படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் லாடம், ஆஹா எத்தனை அழகு உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை சார்மி, நேற்று ஐதராபாத் நகரில் Neckalce Road என்ற பகுதியில் நடைபெற்ற ஊர்வலம் ஒன்றில் கழிவறை விழிப்புணர்வு குறித்த சிறிய பேனரை கையில் ஏந்தி கலந்து கொண்டார். அவர் வைத்திருந்த பேனரில் 'Sanitation is a Human Right' என்று எழுதப்பட்டிருந்தது.
நடிகை சார்மியின் இந்த முயற்சிக்கு பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டு தெரிவித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments