13 வயதில் சிம்புவுக்கு ஜோடியான நடிகை: இன்ஸ்டாவில் உணர்ச்சிகரமான பதிவு!

  • IndiaGlitz, [Wednesday,March 31 2021]

13 வயதில் நாயகியானேன் என சிம்பு படத்தில் அறிமுகமான நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் உணர்ச்சிகரமான பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்

சிம்பு நாயகனாக நடித்த முதல் திரைப்படம் ’காதல் அழிவதில்லை’ இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை சார்மி. இந்த படத்தில் நடிக்கும்போதே அவர் ஒரு தெலுங்கு மற்றும் ஹிந்தி. படத்திலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

நீ தொடு காவாலி என்ற தெலுங்கு படத்தில் தான் முதன்முதலில் தான் நடித்ததாகவும்,அந்த படத்தில் நடித்தபோது தனக்கு 13 என்றும் நடிகை ஷார்மி தனது இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார். மேலும் 19 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த படம் வெளியானது என்றும் இந்த படத்தில் நடக்கும்போது படக்குழுவினர் அனைவரும் தனக்கு ஒத்துழைப்பாக இருந்ததாகவும், இந்த படத்தை அடுத்து தான் பல படங்களில் வெற்றி பெற்று மகிழ்ச்சியான பயணத்தை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சார்மியின் உணர்ச்சிகரமான இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது

சார்மி குறிப்பிட்ட ’நீ தொடு காவாலி’ என்ற திரைப்படம் வெளியான அதே ஆண்டுதான் சிம்புவுடன் அவர் நடித்த ’காதல் அழிவதில்லை’ என்ற திரைப்படமும் வெளியானது என்பதும் இந்த படத்தில் நடிக்கும்போது அவருக்கு வயது 13 தான் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

'வலிமை' நாயகியிடம் அப்டேட் கேட்ட தமிழ் ஹீரோ!

தல அஜித் நடித்துள்ள 'வலிமை' படத்தின் நாயகி ஹூமாகுரேஷியிடம் 'வலிமை' அப்டேட்டை தமிழ் ஹீரோ ஒருவர் கேட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இளைஞர்களைத் தாக்கும் உருமாறிய கொரோனா? எச்சரிக்கும் வைரல் வீடியோ!

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை 50 ஆயிரத்தை எட்டியுள்ளது.

டீன் ஏஜில் ஐஸ்வர்யா, செளந்தர்யா: ரஜினி குடும்பத்தின் அரிய புகைப்படங்கள்!

தமிழ் திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த் என்பது தெரிந்ததே. ரஜினியுடன் நடித்த பல நடிகர்கள் இன்று காணாமல் போய்விட்டார்கள்

தேர்தலுக்காகக் கமல் பாணியைப் பின்பற்றும் ஹரி நாடார்?

பனங்காட்டுப் படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் என்பதை விட தங்கநகைக் கடை ஹரி நாடார் என்பதே தமிழகத்தில் பலருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்து வருகிறது. அந்த

மோடி உழைப்பால் இந்தியா உயர்ந்துள்ளது… பிரதமர் கலந்து கொண்ட விழாவில் தமிழக முதல்வர் பேச்சு!

தமிழகத் தேர்தலையொட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் பிரதமர் நரேந்திர மோடி