ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்திய வழக்கு: தமிழ் இயக்குனர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் உள்பட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ் இயக்குனரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருள் கடத்தலில் கைதான ஜாபர் சாதிக் மீது, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறை தனியாக வழக்குப் பதிவு செய்தது. இப்போதைக்கு, அந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில் அமலாக்கத் துறை தரப்பு சிறப்பு வழக்கறிஞர் என். ரமேஷ் 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார். இதில், ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனாபானு, சகோதரர் முகமது சலீம், தமிழ் திரைப்பட இயக்குநர் அமீர் மற்றும் ஜாபர் சாதிக்கின் படத்தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட மொத்தம் 12 பேருக்கும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் சொத்துகளை பறிமுதல் செய்து முடக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் 12-வது நபராக சேர்க்கப்பட்ட இயக்குநர் அமீர் மீதும் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com