கொரோனா, எபோலாவைவிட கொடிய வைரஸால் புது ஆபத்து??? பீதியை கிளப்பும் விஞ்ஞானிகள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா, எபோலாவைவிட புது கொடிய வைரஸின் பாதிப்புகளைப் பற்றி சமீபத்தில் அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் விஞ்ஞானிகள் அறிக்கை வெளியிட்டு உள்ளனர். இந்த வைரஸ் மனிதர்களைத் தாக்க ஆரம்பித்தால் கொரோனாவை விட நிலைமை படு மோசமாக இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் கொரோனாவை போலவே இந்த வைரஸும் பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்து உள்ளனர்.
எலி அதன் சிறுநீர், உமிழ்நீர் போன்றவற்றின் மூலம் பரவும் புதிய வைரஸ் பற்றிய பாதிப்புகளை அமெரிக்காவின் CDC வெளியிட்டு இருக்கிறது. இது ஏற்கனவே உலகில் பரவிய சப்பரே ரத்தக்கசிவு காய்ச்சல் மற்றும் எபோலா வைரஸ் காய்ச்சல் வகையைச் சார்ந்தது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். சப்பரே என்பது எலிகளினால் பரவக்கூடியது. இந்த நோய்ப்பற்றி உலக மக்களுக்கு அறிமுகம் இல்லாமல் இருந்தாலும் பொலிவியாவில் இந்நோய்த்தொற்று தொடர்ந்து மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தித்தான் வருகிறது. மேலும் இந்த நோய்த்தொற்றும் பாதிக்கப்பட்ட வர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவும் அபாயம் கொண்டது.
அதேபோல எபோலாவும் எலிகளினால் பரவும் தன்மையைக் கொண்டது. எபோலா கடந்த 2004 ஆம் ஆண்டு பொலிவியாவில் முதன் முதலாகக் கண்டுபிடிக்கப் பட்டது. இந்த எபோலா பொலிவியாவில் ஆரம்பித்து பின்னர் தென் ஆப்பிரிக்க நாடுகளில் பரவி பல்லாயிரக் கணக்கான மக்களை காவு வாங்கியது.
மேலும் சப்பரே, எபோலா இரண்டும் ஏறக்குறைய ஒரே தன்மை கொண்ட அரேனா வைரஸ் மூலம் பரவி பாதிப்பை ஏற்படுத்துகின்றன. தற்போது இந்த அரேனா வைரஸ் மூலம் பரவும் புதிய நோய்த்தொற்றை அமெரிக்காவின் CDC வெளியிட்டு இருக்கிறது. இந்நோய்த்தொற்று எதிர்காலத்தில் பெரும் தலைவலியாக இருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர். ஏற்கனவே கொரோனாவின் இரண்டாம் அலையைக் குறித்து கடும் பீதியைக் கிளப்பும் விஞ்ஞானிகள் தற்போது எலிகளினால் பரவும் புதிய வைரஸ் பற்றிய அச்சத்தையும் வெளியிட்டு வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments