ஒரே சேனலில் பணிபுரியும் 26 பேர்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் தற்போது பத்திரிகையாளர்களையும் கொரோனா வைரஸ் தாக்க தொடங்கிவிட்டது. இதனை அடுத்து தற்போது பத்திரிகையாளர் சந்திப்புகள் ரத்து செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனியார் செய்தி தொலைக்காட்சி சேனல் ஒன்றில் பணிபுரியும் சிலருக்கு 96 பேர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து அவர்கள் அனைவருக்கும் ஒரு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்த நிலையில் அவர்களில் 26 பேர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட 26 பேரையும் உடனடியாக அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இந்த 26 பேர்களும் தொடர்பில் இருந்தவர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சென்னையில் 2 செய்தியாளர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டு அவர்கள் கொரோனா தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பத்திரிகையாளர்கள் அனைவரும் சமூக விலகலை கடைபிடித்து ஜாக்கிரதையாக செய்தி சேகரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
 

More News

இணையத்தில் வைரலாகும் ஜாக்குலின் ஜாலி வீடியோ

ஊரடங்கு உத்தரவு காரணமாக சினிமா படப்பிடிப்பு மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதை அடுத்து சினிமா நட்சத்திரங்கள் மற்றும் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் தற்போது

1200 கிமீ, 4 நாட்கள், தெலுங்கானா - கன்னியாகுமரி: பைக்கில் வந்த இஞ்சினியர்

தெலங்கானா மாநிலத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் நான்கு நாட்கள் பயணம் செய்து கன்னியாகுமாரி வந்த இன்ஜினியர் ஒருவர் குறித்த செய்தி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது 

எஸ்.எஸ்.ராஜமெளலி சேலஞ்சை ஏற்று கொண்ட பிரபல ஹீரோ!

இந்த கொரோனா விடுமுறை நேரத்தில் திரையுலக பிரபலங்கள் இடையே வீட்டு வேலைகளை செய்து பெண்களுக்கு உதவும் #BetheREALMAN என்ற சேலஞ்ச் பரவி வருகிறது என்பதும்,

இந்தியாவில் கொரோனா ஏற்படுத்தியிருக்கும் புதிய சிக்கல்!!! கவலையில் இந்திய மருத்துவக் கழகம்!!!

வளரும் நாடுகளில் கொரோனா பரிசோதனையின் அளவு மிகவும் குறைவாக இருக்கிறது.

சிலர் ஏன் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்??? காரணங்களை வெளியிட்ட சென்னை விஞ்ஞானிகள்!!!

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட SGRF என்ற தனியார் மரபணு ஆய்வுக்கூடத்தில் இந்தியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சில விஞ்ஞானிகள்