இன்று முதல் 'பைரவா' படத்தில் திடீர் மாற்றம்
- IndiaGlitz, [Saturday,January 14 2017]
இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் கடந்த 12ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகியது. விஜய் ரசிகர்களை இந்த படம் ஓரளவு திருப்தி செய்திருந்தாலும், பொதுவான ரசிகர்களிடம் இருந்து கலவையான விமர்சனங்களே வந்து கொண்டிருக்கின்றது. இருப்பினும் இந்த படத்தின் முதல் நாள் வசூல் ரஜினியின் கபாலி மற்றும் விஜய்யின் 'தெறி' படங்களுக்கு அடுத்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில் 'பைரவா' படத்தில் பலர் கூறி வரும் ஒரு குறை படத்தின் நீளம் தான். 2 மணி 50 நிமிடங்கள் என்பது ஒரு மசாலா படத்திற்கு அதிகம் என்ற கருத்து நிலவி வருகிறது. இதனால் இன்று முதல் 'பைரவா' படத்தில் 7 நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்டுள்ளது.
ட்ரிம் செய்யப்பட்ட பின்னர் படம் விறுவிறுப்பாக இருக்கும் என்றும் இனிவரும் விடுமுறை நாட்களின் வசூல் திருப்திகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.