நடிகர் சங்க கணக்குகள் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. முன்னாள் பொருளாளர் சந்திரசேகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட பொதுக்குழு கூட்டம் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றபோது பழைய நிர்வாகிகள் இன்னும் நடிகர் சங்க கணக்குகளை முழுமையாக ஒப்படைக்கவில்லை என்று குற்றம் சாட்டியதோடு நடிகர்கள் சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் மீது போலீஸில் புகார் அளிக்க பொதுக்குழு தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றியது.
இந்நிலையில் நடிகர் சங்கத்தின் முன்னாள் பொருளாளர் வாகை சந்திரசேகர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். நடிகர் சங்கம் மற்றும் அறக்கட்டளை குறித்த கணக்கு விவரங்கள் புதிய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும், கணக்குகளில் விபரங்கள் குறித்து புதிய நிர்வாகிகள் கேட்ட விளக்கங்களுக்கு பதில் சொல்ல அவகாசம் கேட்டதாகவும், ஆனால் அவகாசம் அளிக்காமல் அவதூறு பரப்பி வருவதோடு காழ்ப்புணர்ச்சியோடு குறை கூறுவதாகவும் வாகை சந்திரசேகர் கூறியுள்ளார்.
புதிதாக பொறுப்பு ஏற்றதும் ஏற்கனவே இருந்த நடிகர் சங்க ஊழியர்களை ஒட்டுமொத்தமாக வெளியேற்றி, புதிய ஊழியர்களை நியமித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அவர், பழைய ரசீதுகளை எடுக்க கூட புதிய ஊழியர்கள் உள்ளே அனுமதிப்பதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் நடிகர் சங்கத்தில் எந்தத் தவறும் நடக்கவில்லை என்றும் அதனால் தங்களுக்குப் பயம் இல்லை என்றும் சட்ட நடவடிக்கைகளை சந்திக்கத் தயாராக உள்ளதாகவும் வாகை சந்திரசேகர் மேலும் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com