நிலவின் வட்டப் பாதைக்குள் நுழைந்த சந்திராயன் 2: இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் - 2 செயற்கைக்கொள் அடுத்த 16 நிமிடங்களில் பூமியின் வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதையடுத்து பூமியை சுற்றி வரும் வட்டப்பாதையும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஆகஸ்ட் 14ஆம் தேதி, நிலவை நோக்கி தனது பயணத்தை தொடங்கிய சந்திராயன் 2. திட்டமிட்டப்படி இன்று காலை நிலவின் வட்டப்பாதையில் இணைந்தது என இஸ்ரோ அறிவித்துள்ளது. தற்போது வெற்றிகரமாக நிலவின் வட்டப்பாதையில் சந்திராயன் 2 விண்கலம் சுற்றி வருவதாகவும், அதன் ஒவ்வொரு நகர்வையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் வரும் செப்டம்பர் 2ஆம் தேதி, சந்திராயன் 2-ல் உள்ள விக்ரம் லேண்டர் பிரிந்து செல்லும் என்றும் அது நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இருமுறை மாற்றியமைக்கப்படும் என்றும் அதன் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு செப்டம்பர் 7ஆம் தேதி நிலவில் லேண்டரை தரையிறக்க திட்டமிடப்படுள்ளதகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. இஸ்ரோவின் திட்டப்படி விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கினால் அது இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படும்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments