close
Choose your channels

'சந்திரமுகி 2' ரிலீஸ் தேதி அறிவிப்பு.. சரியான தேதியை லாக் செய்த படக்குழுவினர்..!

Thursday, June 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ராகவா லாரன்ஸ் நடிப்பில், பி வாசு இயக்கத்தில் உருவாகி வரும் ’சந்திரமுகி 2’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அது குறித்த போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சந்திரமுகி’ என்ற திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே செய்திகள் கசிந்த நிலையில் தற்போது விநாயகர் சதுர்த்தி விருந்தாக வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெள்ளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 16, 17, 18 ஆகிய மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் சரியான தேதியை படக்குழுவினர் லாக் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சந்திரமுகி கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருக்கும் இந்த படத்தில் லட்சுமி மேனன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். லைகா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில், ஆர் ஜி ராஜசேகர் ஒளிப்பதிவில், தோட்டா தரணி கலை இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment