ஹாலிவுட்டில் வாக்கிங் போகும் வேட்டையன் - சந்திரமுகி.. வேற லெவல் புரமோஷன்..!

  • IndiaGlitz, [Thursday,September 07 2023]

ராகவா லாரன்ஸ் நடிப்பில், பி. வாசு இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவான ’சந்திரமுகி 2’ திரைப்படம் வரும் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு ஏற்கனவே மிகப்பெரிய அளவில் புரமோஷன் நடந்து வரும் நிலையில் தற்போது ஹாலிவுட் பாணியில் புரமோஷன் நடந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு முக்கிய சாலையில் சந்திரமுகி மற்றும் வேட்டையன் வேடமிட்ட மாடல்கள் நடந்து வருவதும் அதை அங்கிருந்த மக்கள் ஆச்சரியத்துடன் பார்ப்பதுமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாக இந்த சாலையில் ஹாலிவுட்டில் வெளியாகும் ஸ்பைடர்மேன் போன்ற படங்களுக்கு புரமோஷன் செய்ய ஸ்பைடர்மேன் வேடமிட்டு மாடல்கள் நடந்து வருவார்கள். அந்த வகையில் தற்போது ஒரு தமிழ் திரைப்படத்தில் உள்ள கேரக்டர்களில் இந்த சாலையில் மாடல்கள் நடந்து வருவது அந்த பகுதி மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து வேட்டையன் மற்றும் சந்திரமுகி வேடமிட்ட மாடல்களுடன் பொதுமக்கள் இணைந்து செல்பி மற்றும் புகைப்படங்களை எடுத்து வருகின்றனர்

சமீபத்தில் வெளியான ’சந்திரமுகி 2’ ட்ரெய்லரில் வேட்டையன் மற்றும் சந்திரமுகி கேரக்டர்களின் கெட்டப் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் இந்த படத்தை மிகுந்த ஆர்வத்துடன் பார்ப்பதற்கு காத்திருக்கின்றனர். ’சந்திரமுகி’ முதல் பாகம் போலவே இரண்டாம் பாகம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

அமைச்சர் உதயநிதிக்கு எனது முழு ஆதரவு.. அனைவரும் அவருடன் நிற்க வேண்டும்: வெற்றிமாறன்

தமிழக அமைச்சர் உதயநிதி சமீபத்தில் சனாதனம் குறித்து பேசியது சர்ச்சைக்கு உள்ளான நிலையில் திரையுலகினர் பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்

'லியோ' அப்டேட் எப்போது? 'ஜவான்' படம் பார்க்க வந்த அனிருத் கொடுத்த முக்கிய தகவல்..!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'லியோ' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தின் ப்ரோமோஷன் பணியை தொடங்க

'ஜெயிலர்' உள்பட எத்தனை தமிழ் திரைப்படங்கள்.. இந்த வார ஓடிடி ரிலீஸ் தகவல்..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் ரிலீசான சூப்பர் ஹிட் படங்கள் ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'ஜெயிலர்'

கவின் - இளன் படத்தின் நாயகிகள் இந்த இரு நடிகைகளா?

நடிகர் கவின் நடிப்பில், இயக்குனர் இளன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஸ்டார்' என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும்

ஆட்டம் ஆரம்பம்.. 'கமல் 233' படத்தின் மாஸ் வீடியோ..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் 233 வது திரைப்படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்க இருப்பதாக  சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம்