'சந்திரமுகி 2' கிளைமாக்ஸ் பாடலில் கங்கனா ரனாவத்.. நடன இயக்குனர் யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சந்திரமுகி’ திரைப்படம் கலந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் 18 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.
ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தை பி வாசு இயக்கி வருகிறார் என்பதும் எம்.எம்.கீரவாணி இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’சந்திரமுகி 2’ படத்தின் கிளைமாக்ஸ் பாடல் கட்சியின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் இதற்கான ரிகர்சல் நடந்து வருவதாக கூறப்படுகிறது. சந்திரமுகி ஆக இந்த படத்தில் நடிக்கும் கங்கன ரனாவத் நடனமாடும் இந்த பாடலை நடன இயக்குனர் கலா மாஸ்டர் இயக்கி வருவதாகவும் ’சந்திரமுகி’ முதல் பாகத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் இடம்பெற்ற ‘ரா ரா’ என்ற பாடல் போல் இந்த பாடலும் வேற லெவல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கலா மாஸ்டருடன் இணைந்து கங்கன கிளைமாக்ஸ் பாடலுக்கான நடன பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.
லைகா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவில் தோட்டா தரணி கலை இயக்கத்தில் உருவாக்கி வருகிறது. இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாக வாய்ப்புள்ளது.
Kangana started practicing for #Chandramukhi2 climax shoot. #KanganaRanaut pic.twitter.com/fNuZxG9kgN
— Kangana Ranaut (@TeamKanganaaa) January 29, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments