வேட்டையன் ராஜாவின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.. 'சந்திரமுகி 2' ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி. வாசு இயக்கத்தில் உருவாகி வந்த ’சந்திரமுகி 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த போஸ்டர் வைரல் ஆகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சந்திரமுகி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ’சந்திரமுகி 2’ படம் கடந்த சில மாதங்களாக உருவாகி வந்தது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரில் வேட்டையன் ராஜா கேரக்டரில் அட்டகாசமாக ராகவா லாரன்ஸ் இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
சந்திரமுகி முதல் பாகத்தில் வேட்டையன் ராஜா என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் சில நிமிடங்கள் மட்டும் வருவார். ஆனால் இந்த படத்தில் படம் முழுவதும் வேட்டை ராஜா கேரக்டரில் ராகவா லாரன்ஸ் நடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
மேலும் சந்திரமுகி கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார் என்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படம் வரும் விநாயகர் சதுர்த்தி விடுமுறையில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லைகா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில், ஆர் ஜி ராஜசேகர் ஒளிப்பதிவில், தோட்டா தரணி கலை இயக்கத்தில் எம்.எம்.கீரவாணி இசையில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், ராதிகா, வடிவேலு, ஸ்ருஷ்டி டாங்கே, லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், ரவி மரியா, சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Back with double the swag and attitude! 😉 Witness Vettaiyan Raja's 👑 intimidating presence in @offl_Lawrence 's powerful first look from Chandramukhi-2 🗝️
— Lyca Productions (@LycaProductions) July 31, 2023
Releasing this GANESH CHATURTHI in Tamil, Hindi, Telugu, Malayalam & Kannada! 🤗#Chandramukhi2 🗝️
🎬 #PVasu
🌟… pic.twitter.com/nf7BHwi3x6
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments