தொடங்கியது 'சந்திரமுகி 2' படத்தின் பிசினஸ்.. மாஸ் அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,January 16 2023]


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சந்திரமுகி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமான ’சந்திரமுகி 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தில் வடிவேலு, ராதிகா உள்பட பல நடித்து வருகின்றனர் என்பதும் முதல் பாகத்தை இயக்கிய பி வாசு இந்த படத்தை இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே.

மரகதமணி இசையில் ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவில் லைகா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் பிசினஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

‘சந்திரமுகி 2’ படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளின் ’சந்திரமுகி 2’ படத்தின் டிஜிட்டல் உரிமையை பெற்று இருப்பதாகவும் திரையரங்க ரிலீசுக்கு பின்னர் இந்த படத்தை நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் பார்க்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தை அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வரும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.