ரஜினியை நலம் விசாரித்த முன்னாள் முதல்வர் மற்றும் கவர்னர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக இன்று மதியம் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவருக்கு ரத்த அழுத்த மாறுபாடு தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் ஒரு பக்கம் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் திரையுலக பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களது சமூக வலைதளங்கள் மூலம் ரஜினிகாந்த் விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஒரு சில முக்கிய பிரபலங்கள் ரஜினிகாந்துக்கு நேரடியாக போன் செய்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் சற்று முன்னர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தார் என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் முன்னாள் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்த் குணமாக வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார். அதேபோல் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் ’அப்பல்லோ மருத்துவமனையை தொடர்பு கொண்டு ரஜினிகாந்த் அவர்களின் உடல்நிலையை விசாரித்தேன் என்றும் அவர் விரைவில் உடல் நலம் பெற விரும்புகிறேன், பிரார்த்திக்கின்றேன் என்றும் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
மேலும் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் அவர்கள் தனது டுவிட்டரில் ’ரஜினிகாந்த் விரைவில் குணமடைய விரும்புகிறேன் என்றும் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்’ என்றும் கூறியுள்ளார்.
Deeply concerned about superstar @rajinikanth after hearing the news of him being admitted to a hospital today. Wishing him a speedy recovery and good health!
— N Chandrababu Naidu #StayHomeSaveLives (@ncbn) December 25, 2020
ஹைதராபாத் அப்போலோ
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) December 25, 2020
மருத்துவமனையை தொடர்பு கொண்டு சகோதரர் ரஜினிகாந்த் அவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்தேன் . அவர் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று விரும்புகிறேன் ...பிரார்த்
திக்கிறேன் @rajinikanth
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout