திரைப்படம் ஆகிறது சந்திரபாபு வாழ்க்கை வரலாறு

  • IndiaGlitz, [Wednesday,November 28 2018]

எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகராகவும், ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் இருந்தவர் நடிகர் சந்திரபாபு. செல்வச்செழிப்புடன் வாழ்ந்த சந்திரபாபு, எம்ஜிஆர் நடிக்கும் படம் ஒன்றை தயாரித்து அந்த படம் பாதியில் நின்றுபோனதால் கடனாளியானார். கடைசி காலத்தில் வாடகை வீட்டில் உணவுக்கு கூட காசு இல்லாமல் வறுமையில் மறைந்தார்

இந்த நிலையில் இந்திய திரையுலகில் தற்போது பல வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாகி வெற்றி பெற்று வரும் நிலையில் சந்திரபாபு வாழ்க்கை வரலாறு திரைப்படமும் உருவாகவுள்ளது.

இந்த படத்தை இயக்குனர் கே.ராஜேஷ்வர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே 'சீவலப்பேரி பாண்டி, 'அமரன்', 'கோவில்பட்டி வீரலட்சுமி போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

சந்திரபாபு வேடத்தில் நடிக்கும் நடிகரின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், அதன்பின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கே.ராஜேஷ்வர் தெரிவித்துள்ளார்.

கடைசி காலத்தில் எம்ஜிஆருடன் சந்திரபாபுவுக்கு கருத்துவேறுபாடு இருந்தபோதிலும் இருவரும் சந்தித்து மனம் விட்டு பேசும் காட்சி ஒன்று இந்த படத்தில் ஹைலைட்டாக இருக்கும் என்றும் இயக்குனர் கூறியுள்ளார்.

More News

'2.0' சிட்டிக்கு வாழ்த்து கூறிய 'பேட்ட'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' மற்றும் 'பேட்ட' ஆகிய இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் நிகழ்வு நீண்ட வருடங்களுக்கு பின்னர் தற்போது தான் நடக்கின்றது.

ஐஸ்வர்யாவை அடுத்து மகத்துடன் ஜோடி சேர்ந்த யாஷிகா

பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது இணைபிரியாத தோழிகளாக மாறிவிட்ட ஐஸ்வர்யா தத்தா மற்றும் யாஷிகா ஆகிய இருவருக்கும் திரையுலகில் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

ஜெர்மனியில் அஜித் முக்கிய ஆலோசனை: வைரலாகும் புகைப்படங்கள்

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் ஒருபக்கம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் அவர் நடிக்கவுள்ள

'தளபதி 63' படத்தின் கனவு நாயகியின் பரபரப்பான கருத்து

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கவுள்ள 'தளபதி 63' படத்தின் நாயகியாக 'கீதா கோவிந்தம் படத்தில் நடித்த ராஷ்மிகா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

உலகக்கோப்பை ஹாக்கி தொடக்க விழாவில் அசத்திய ஏ.ஆர்.ரஹ்மான்

உலகக்கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டி இன்று முதல் தொடங்குகிறது. ஏ,பி,சி,டி என 4 பிரிவுகளில் மொத்தம் 16 அணிகள் இந்த தொடரில் கலந்து கொள்ளவுள்ளன. இந்திய ஹாக்கி அணி சி பிரிவில் இடம்பெற்றுள்ளது.