'பிக்பாஸ் 3' நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உண்மையா? சாந்தினி தமிழரசன் பதில்

  • IndiaGlitz, [Thursday,May 09 2019]

பிக்பாஸ் இரண்டு சீசன்கள் முடிவடைந்து மூன்றாவது சீசன் வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ள நிலையில் இதற்கான புரமோஷன் படப்பிடிப்பில் சமீபத்தில் கமலஹாசன் கலந்து கொண்டார். மேலும் மூன்றாவது சீசனுக்கான போட்டியாளர்களும் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் இதில் நடிகை சாந்தினி தமிழரசனும் ஒருவர் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து பேட்டி ஒன்றில் கூறிய சாந்தினி தமிழரசன், 'பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு வந்துள்ளது உண்மைதான். ஆனால் அதில் கலந்து கொள்வதா? வேண்டாமா? என்பது குறித்து இன்னும் நான் முடிவு செய்யவில்லை. ஏற்கனவே ஒருசில படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளதால் அந்த படங்களை குறிப்பிட்ட தேதியில் நடித்து கொடுக்க வேண்டும். எனவே இப்போதைக்கு நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உறுதியில்லை என்பதுதான் உண்மை' என்று கூறியுள்ளார்.

சாந்தினி தமிழரசனை தவிர நடிகைகள் லைலா, சுதா சந்திரன் ஆகியோர்களிடமும் சேனல் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.