வேட்டையன் - சந்திரமுகி மோதும் மாஸ் காட்சி.. 'சந்திரமுகி 2' புதிய ட்ரைலர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி. வாசு இயக்கத்தில் உருவான ‘சந்திரமுகி 2’ திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் புதிய ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சுமார் 2 நிமிடங்கள் உள்ள இந்த ட்ரெய்லரில் உள்ள காட்சிகள் மாஸாக இருக்கிறது என்பதும் குறிப்பாக இந்த ட்ரெய்லரின் முடிவில் வேட்டையன் மற்றும் சந்திரமுகி ஆவேசமாக வாளை கையில் வைத்துக்கொண்டு மோதும் காட்சியை பார்க்கும் போது ஆச்சரியம் ஏற்படுகிறது.
17 வருஷத்துக்கு முன்பு எங்கள் வீட்டு பெண் கங்கா, சந்திரமுகி ஆக தன்னை நினைத்துக் கொண்டாள். ஆனால் இப்போது ஒரிஜினல் சந்திரமுகியே வந்துவிட்டார் என்று வடிவேலு சொல்வதிலிருந்து கங்கனா ரனாவத் ஒரிஜினல் சந்திரமுகியாக நடித்துள்ளார் என்பதும் அதேபோல் ராகவா லாரன்ஸ் ஒரிஜினல் வேட்டையனாக நடித்துள்ளார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொத்தத்தில் இந்த ட்ரைலர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் எம்எம் கீரவாணி இசையில் உருவான இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா, லட்சுமிமேனன், மகிமா நம்பியார் உள்பட பலர் நடித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com