'சந்திரமுகி 2' படத்தின் நாயகி இந்த இருவரில் ஒருவரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சந்திரமுகி’ திரைப்படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. சென்னையில் இந்த படத்தின் வசூல் சாதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பதும், விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

’சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு நடிப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அதேபோல் இந்தப் படத்தை பி வாசு இயக்க இருப்பதாகவும் எம்எம் கீரவாணி இந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் ஆண்ட்ரியா அல்லது ராஷி கண்ணா நடிக்கலாம் என்றும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தை ஒரே கட்டத்தில் முழுவதுமாக படப்பிடிப்பை முடித்து விரைவில் ரிலீஸ் செய்ய லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.