கோடி ரூபாய் கொடுத்தாலும் அம்பானி வீட்டு திருமணத்தில் நடனமாட மாட்டேன்: 'சந்திரமுகி 2' நடிகை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் நடந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகினரும் கலந்து கொண்டு டான்ஸ் ஆடிய நிலையில் கோடிக்கணக்கில் கொட்டி கொடுத்தாலும் அம்பானி வீட்டு திருமணம் உள்பட எந்த திருமண நிகழ்ச்சியிலும் நான் நடனமாட மாட்டேன் என ’சந்திரமுகி 2’ படத்தில் நடித்த நடிகை கங்கனா ரனாவத் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ’பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் எவ்வளவு பணம் கொடுத்தாலும் திருமண விழாக்களில் பாட மாட்டேன் என்று கூறியதைப் போல நானும் கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுத்தாலும் திருமண விழாக்களில் நடனம் ஆட மாட்டேன். இந்த விஷயத்தில் நாங்கள் இருவரும் ஒரே கொள்கையை கடை பிடிக்கிறோம்
திருமண விழாக்களில் நடனமாட எனக்கு பல வாய்ப்புகள் வந்தபோதிலும் அதை நான் மறுத்துவிட்டேன். விருது நிகழ்ச்சியில் கூட நான் நடனம் ஆட மாட்டேன். புகழ், பணம் ஆகியவற்றை வேண்டாம் சொல்வதற்கு ஒரு வகையான குணம் தேவை, அந்த குணம் எங்களிடம் இருக்கிறது.
நல்ல முறையில் பணத்தை உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்பதை இளைய தலைமுறை என புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இதை சொல்கிறேன்’ என்று கூறியுள்ளார். கங்கனாவின் இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் முகேஷ் அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள கங்கனாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் அதனால் தான் அவர் அதிருப்தியில் இவ்வாறு பேசுவதாக பாலிவுட் திரையுலகினர் கூறி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments