மக்களவை தேர்தலில் எனது மகள் போட்டியிடுவார்: 'சந்திரமுகி 2' நடிகையின் தந்தை தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த தேர்தலில் பல திரையுலக பிரபலங்கள் போட்டியிடுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ’சந்திரமுகி 2’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என அவரது தந்தை அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழில் ‘தலைவி’, ‘சந்திரமுகி 2’ உள்ளிட்ட படங்களில் நடித்தவரும், பிரபல பாலிவுட் நடிகையுமான கங்கனா ரனாவத் தந்தை அமர்தீப் ரனாவத் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘பாஜக சார்பில் மக்களவை தேர்தலில் கங்கனா ரனாவத் நிச்சயம் போட்டியிடுவார், ஆனால் அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பதை கட்சி முறைப்படி அறிவிக்கும் என்று தெரிவித்தார்.
தமிழில் கங்கனா ரனாவத் நடித்த ‘தலைவி’ மற்றும் ’சந்திரமுகி 2’ ஆகிய இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. அவர் நடித்த ’தேஜஸ் உள்ளிட்ட சில பாலிவுட் படங்களும் தோல்வியை சந்தித்தது. தற்போது அவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’எமர்ஜென்சி’ என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் திடீரென நடிகை கங்கனா மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று அவரது தந்தை அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments