மக்களவை தேர்தலில் எனது மகள் போட்டியிடுவார்: 'சந்திரமுகி 2' நடிகையின் தந்தை தகவல்..!

  • IndiaGlitz, [Thursday,December 21 2023]

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த தேர்தலில் பல திரையுலக பிரபலங்கள் போட்டியிடுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ’சந்திரமுகி 2’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என அவரது தந்தை அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழில் ‘தலைவி’, ‘சந்திரமுகி 2’ உள்ளிட்ட படங்களில் நடித்தவரும், பிரபல பாலிவுட் நடிகையுமான கங்கனா ரனாவத் தந்தை அமர்தீப் ரனாவத் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘பாஜக சார்பில் மக்களவை தேர்தலில் கங்கனா ரனாவத் நிச்சயம் போட்டியிடுவார், ஆனால் அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பதை கட்சி முறைப்படி அறிவிக்கும் என்று தெரிவித்தார்.

தமிழில் கங்கனா ரனாவத் நடித்த ‘தலைவி’ மற்றும் ’சந்திரமுகி 2’ ஆகிய இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. அவர் நடித்த ’தேஜஸ் உள்ளிட்ட சில பாலிவுட் படங்களும் தோல்வியை சந்தித்தது. தற்போது அவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’எமர்ஜென்சி’ என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் திடீரென நடிகை கங்கனா மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று அவரது தந்தை அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் கைது.. பட்டம் கிடைத்த அடுத்த வாரமே சோகம்..!

பிக் பாஸ் தெலுங்கு டைட்டில் வின்னர் கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட நிலையில் டைட்டில் வின்னர் ஆக அறிவிக்கப்பட்டவர் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நான் அறைஞ்சிருப்பேன் உன்னை.. மணியை கண்டித்த ரவீனா அம்மா...

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் உறவினர்கள் வருகை தரும் வாரம் என்பதால் இதுவரை ஜாலியாக இருந்தது என்பதை பார்த்தோம். கடந்த சீசன்களில் உறவினர்கள் வரும்போது

இனிமேல் அடிக்கடி இப்படி பண்ணலாம்ன்னு இருக்கேன்... 'மெர்ரி கிறிஸ்துமஸ்' டிரைலர்..!

 விஜய் சேதுபதி மற்றும் கேத்ரினா கைஃப் நடித்த பாலிவுட் திரைப்படமான 'மெர்ரி கிறிஸ்துமஸ்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆகயிருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி

எந்த பெட்டியிலும் நீ கைவைக்க கூடாது: டைட்டில் வின்னர் யார் என்பதை மறைமுகமாக கூறிய அர்ச்சனா சகோதரி..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் குடும்பத்தினர் வருகை தரும் வாரம் என்பதால் கலகலப்பாக உள்ளது என்பதும் சில நேரங்களில் சென்டிமென்ட் ஆக இருந்தது என்பதையும் பார்த்தோம்.

'சூர்யா 43' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு எங்கே? 'ஜெய்பீம்' உடன் கனெக்ட் ஆகிறதா?

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் 'சூர்யா 43'