'சந்திரமுகி' பட நடிகையா இவர்? மாடர் உடையில் கலக்கல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Monday,November 29 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பி வாசு இயக்கத்தில் உருவான ’சந்திரமுகி’ திரைப்படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் வடிவேலு காமெடி மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக இருந்தது என்பதும் இந்த படத்தின் வெற்றிக்கு வடிவேலு காமெடி ஒரு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக ஸ்வர்ணா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ஸ்வர்ணா மாத்யூ என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கும் ரஜினிக்கும் இடையிலான காமெடி காட்சிகள் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் அளவுக்கு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

’தாய் மனசு’ என்ற திரைப்படத்தில் கடந்த 1994-ஆம் ஆண்டு தமிழ் திரையில் அறிமுகமானார் ஸ்வர்ணா, அதன் பின்னர் மாயாபஜார், கோகுலத்தில் சீதை, பெரிய தம்பி உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். கடந்த 2003ஆம் ஆண்டு வர்கீஸ் என்பவரை திருமணம் செய்த ஸ்வர்ணாவுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகை ஸ்வர்ணா அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவு செய்து வரும் ஸ்வர்ணா, சமீபத்தில் பதிவு செய்துள்ள புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. அதில் அவர் மாடர்ன் டிரஸ்ஸில் கலக்கியுள்ள நிலையில் ’சந்திரமுகி’ படத்தில் காமெடி கேரக்டரில் நடித்த நடிகையா இவர்? என ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.