எம்ஜிஆர் வீட்டில் சந்திரபாபுவுக்கு நடந்த கொடுமை.. சகோதரர் கூறிய அதிர்ச்சி தகவல்..!
- IndiaGlitz, [Friday,March 15 2024]
மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் சகோதரர் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் எம்ஜிஆர் வீட்டில் அவருக்கு நடந்த கொடுமை குறித்த அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
நடிகராக மட்டுமின்றி சந்திரபாபு ஒரு தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் இருந்தவர் என்பதும் அப்படித்தான் எம்ஜிஆர், சாவித்திரி நடித்த ’மாடி வீட்டு ஏழை’ என்ற படத்தை சந்திரபாபு தயாரித்து இயக்கினார் என்பதும் பலரும் அறியாத உண்மை. இந்த படத்திற்கு பணத்தட்டுப்பாடு ஏற்பட்ட போது நாயகி சாவித்திரி தனது நட்பின் அடையாளமாக பணம் கொடுத்து உதவியதாகவும் அவரால் தான் இந்த படம் நல்ல முறையில் வளர்ந்து வந்ததாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த படத்திற்கு அவர் சம்பளமே வாங்காமல் நடித்து கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் தான் திடீரென சாவித்திரி உடல் எடை அதிகரித்ததன் காரணமாக நாயகியை மாற்ற வேண்டும் என்று எம்ஜிஆர் சொன்னதாகவும், ஆனால் சம்பளமே இல்லாமல் நடித்துக் கொடுக்கும் சாவித்திரியை மாற்ற முடியாது, அது மட்டும் இன்றி அவரை வைத்து எடுத்த காட்சிகளும் வீணாகிவிடும் என்று சந்திரபாபு மறுத்துள்ளார்.
நாயகியை மாற்றாவிட்டால் இந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று எம்ஜிஆர் கூறியதாகவும், இதனை அடுத்து எம்ஜிஆரை சந்திரபாபு சந்திக்க சென்றபோது எம்ஜிஆரின் சகோதரர் சந்திரபாபுவின் ஜாதி பெயரை சொல்லி திட்டியதாகவும் சந்திரபாபு சகோதரர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சந்திரபாபு, எம்ஜிஆர் சகோதரரை அடிக்கச் சென்றதாகவும் அதன் பின்னர் இந்த படத்தில் எம்ஜிஆர் நடிக்கவில்லை என்பதால் அந்த படம் ரிலீஸ் ஆகவே முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அதனால் அவர் கடன் சுமைக்கு உள்ளானதாகவும் சந்திரபாபுவின் சகோதரர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் சந்திரபாபு மிகவும் கஷ்ட நிலையில் இருந்தபோது எம்ஜிஆர் தான் கிறிஸ்துமஸ் அன்று 5000 ரூபாய் கொடுத்து உதவியதாகவும், என்னை என்னதான் சந்திரபாபு திட்டியிருந்தாலும் கிறிஸ்துமஸ் அன்று அவரது வீட்டில் விளக்கேற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் எம்ஜிஆர் கொடுத்து அனுப்பியதாகவும் சந்திரபாபுவின் சகோதரர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.