'இந்தி தெரியாது போடா' டீசர்ட் அணிந்த மேலும் தமிழ் நடிகை

  • IndiaGlitz, [Monday,September 14 2020]

கோலிவுட் திரை உலகின் பிரபலங்கள் சிலர் கடந்த சில நாட்களுக்கு முன் ’ஹிந்தி தெரியாது போடா ’மற்றும் ’I am a தமிழ் பேசும் இந்தியன்' ஆகிய வாசகங்கள் அடங்கிய டீஷாட்டுகளை அணிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள் என்பது தெரிந்ததே. இதுகுறித்து ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆன நிலையில் இதே வாசகங்கள் கொண்ட டீசர்ட்டுகள் லட்சக்கணக்கில் திருப்பூர் பனியன் கம்பெனிகளில் ஆர்டர் செய்யப்பட்டதாக கூறப்பட்டது

இந்த நிலையில் தற்போது தமிழ் நடிகைகளில் ஒருவரான சாந்தினி தமிழரசன் ’ஹிந்தி தெரியாது போடா’ என்ற டீசர்ட் அணிந்து தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

ஏற்கனவே ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட ஒரு சில நடிகைகள் ஹிந்திக்கு எதிரான வாசகங்கள் கொண்ட டீசர்ட்டுகளை அணிந்த புகைப்படங்கள் வைரலான நிலையில் தற்போது அந்த பட்டியலில் சாந்தினி தமிழரசனும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

சாந்தனு நடித்த ‘சித்து+2’ என்ற படத்தில் அறிமுகமான சாந்தினி தமிழரசன், அதன்பின் ‘வில் அம்பு’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘கவண்’, ‘பில்லா பாண்டி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது