கேட்ச் பிடிக்க சென்ற கிரிக்கெட் வீரருக்கு உடைந்த பற்கள்: மைதானத்தில் நடந்த சோகம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கேட்ச் பிடிக்க சென்ற கிரிக்கெட் வீரருக்கு பந்து பட்டதால் பற்கள் உடைந்ததாக வெளிவந்திருக்கும் வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையில் தற்போது லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இதில் கண்டி ஃபால்கன்ஸ் மற்றும் காலி கிளாடியேட்டர்ஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் கிளாடியேட்டர் அணி பேட்டிங் செய்தபோது 4-வது ஓவரில் பேட்ஸ்மேன் பந்தை வேகமாக அடித்தார். அப்போது அதை கேட்ச் பிடிக்க சென்ற கருணாரத்னே என்ற வீரரின் முகத்தில் பந்து தாக்கியது. இதனால் அவரது வாயில் இருந்து ரத்தம் வந்ததை அடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த போது அவரது நான்கு பற்கள் உடைந்து இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அவர் தற்போது குணமாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Chamika hospitalized while attempting catch for Kandy Falcons#LPL2022 #LPL #ChamikaKarunaratne #Cricket pic.twitter.com/yrkT2bbhoG
— Ada Derana Sports (@AdaDeranaSports) December 7, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments