விஷாலின் 'சக்ரா' படம் குறித்த ஆச்சரிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,June 20 2020]

விஷால் நடித்த அயோக்யா’ மற்றும் ‘ஆக்சன்’ ஆகிய திரைப்படங்கள் கடந்த ஆண்டு வெளியான நிலையில் இந்த ஆண்டு அவர் நடித்துள்ள ’துப்பறிவாளன் 2’ மற்றும் ‘சக்ரா’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில் உருவான ’துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் திடீரென விஷாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இயக்குனர் மிஷ்கின் இந்த படத்தில் இருந்து விலகினார். இதனை அடுத்து மீதி படத்தை விஷாலே இயக்கி வருவதாகவும் இந்த படம் லாக்டவுன் முடிந்த உடன் வெளியாகும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் விஷால் நடித்து வரும் இன்னொரு திரைப்படம் ’சக்ரா. எம்எஸ் ஆனந்தன் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து தற்போது லாக்டவுன் நேரத்தில் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’சக்ரா’ படத்தின் ஆச்சரியமான அறிவிப்பு ஒன்று வரும் 22ம் தேதி திங்கட்கிழமை வெளியிட இருப்பதாக படக்குழுவினர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆச்சரியமான அறிவிப்பு என்னவாக இருக்கும் என்பதே விஷால் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

விஷால், ரெஜினா, ஷ்ராதா ஸ்ரீநாத், ஸ்ருஷ்டி டாங்கே, ரோபோ சங்கர், மனோபாலா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.