இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரருக்கு நிச்சயதார்த்தம்: வைரலாகும் புகைப்படம்

  • IndiaGlitz, [Saturday,August 08 2020]

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளரும் ஐபிஎல் பெங்களூரு ராயல் சேலஞ்ச் கிரிக்கெட் அணியின் வீரர்களில் ஒருவரான யுஜ்வேந்திர சாஹல் அவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை சாஹல் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்

திருமணத்திற்கு முந்தைய நிகழ்வான ராகா என்ற நிகழ்ச்சி குடும்பத்தினர் மத்தியில் நடந்துள்ளதாக சாஹல் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். மேலும் மணப்பெண்ணுடன் சாஹல் புகைப்படமும் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவாகியுள்ளது. சாஹலின் இந்த டுவிட்டுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

2020 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெற உள்ள நிலையில் ஐபிஎல் போட்டி முடிவடைந்த பின்னர் சாஹல் திருமணம் நடைபெறும் எதிர்பார்க்கப்படுகிறது. சாஹலுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்ததை அடுத்து இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும் ரசிகர்களும் அவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது