கமல் முதலமைச்சராக வாய்ப்பு இல்லை: சாருஹாசன் பேட்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். இன்னும் கட்சியின் பெயர், சின்னம் கொடி ஆகியவற்றை அறிவிக்க வேண்டியது ஒன்றுதான் பாக்கி என்று கூறப்பட்டு வருகிறது. சமீபத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த கமல், வரும் நவம்பர் 7ஆம் தேதி அவருடைய பிறந்த நாள் அன்று அதிகாரபூர்வமாக தனிக்கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கமல்ஹாசனின் சகோதரரும் தேசிய விருது பெற்ற நடிகருமான சாருஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது கமல், ரஜினி ஆகிய இருவரில் யார் அரசியலில் சாதிப்பார்கள் என்று கூறும்போது கமலுக்கு அதிக வாய்ப்பு இருக்கின்றதா? என்ற கேள்விக்கு 'இல்லை' என்று பதில் கூறிய சாருஹாசன், கமல்ஹாசனுக்கு முதலமைச்சராகும் வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் இப்போது இருக்கும் அரசியல்வாதிகளில் யார் முதலமைச்சர் பதவிக்கு தகுதியானவர் என்ற கேள்விக்கு 'அன்புமணி ராமதாஸ்' என்றும் சாருஹாசன் பதிலளித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout