ஆண் விபச்சார உரிமை கேட்போம்: சபரிமலை விவகாரம் குறித்து சாருஹாசன்

  • IndiaGlitz, [Sunday,October 21 2018]

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது குறித்து பல்வேறு தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் சபரிமலை விவகாரம் குறித்து ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் கூறிய கருத்துக்களை பார்த்தோம்

இந்த நிலையில் நடிகரும், கமல்ஹாசனின் சகோதரருமான சாருஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சபரிமலை விவகாரம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

ஒரு தவறான சமத்துவம். சபரிமலைக்கு செல்வதில் கேட்கப்படும் சமத்துவம், பெண்கள் ஆண்களின் பொதுக் கழிப்பறையில் உட்காரும் உரிமை கேட்பது போன்றது. ஏன் புகை பிடிப்பதிலும் தண்ணி அடிப்பதிலும் சமத்துவம் கேட்பதில்லை? அதையெல்லாம் கேட்டால் நாங்கள் ஆண் விபசார உரிமை கேட்போம்' என சாருஹாசன் தெரிவித்துள்ளார்.