பிரமிக்க வைக்கும் சுந்தர்பிச்சையின் தினசரி வழக்கம் பற்றி தெரியுமா?
- IndiaGlitz, [Friday,October 15 2021]
உலகிலுள்ள கோடிக்கணக்கான மனிதர்களுக்கு இடையில் சாதனையாளர்கள் மற்றும் வெற்றியாளர்களின் வாழ்க்கைமுறை எப்போதுமே சுவாரசியமாகத்தான் இருக்கின்றன. அதிலும் சில விஞ்ஞானிகள் செய்யும் செயல்கள் வியப்பூட்டும் விதத்திலேயே அமைந்திருக்கிறது.
அந்த வகையில் ஒரு சாதாரண இந்தியக் குடும்பத்தில் பிறந்து தற்போது கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் செயல்தலைவராக இருக்கும் சுந்தர்பிச்சையின் வாழ்க்கைமுறை எப்படிப்பட்டது? அவர் என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ்கிறார் என்பதுபோன்ற சுவாரசியமான கேள்விகள் பலருக்கும் இருக்கத்தான் செய்கிறது.
இந்தக் கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு சுந்தர்பிச்சை செய்தியாளர்களுக்கு வழங்கிய ஒரு பேட்டியில் தன்னுடைய அன்றாட பழக்க வழக்கங்களைக் குறித்து தெரிவித்துள்ளார். அதில் காலை 6.30-7 மணிக்குள் எழுந்து கொள்வாராம். அடுத்து செய்தித்தாள் வாசிப்பது. பெரும்பாலும் வால்ஸ்ட்ரீட் ஜெர்னல் விருப்பமானது. சில நேரங்களில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையும் வாசிப்பாராம். அடுத்து தேநீர் அல்லது காபி அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அடுத்து காலைநேர உணவுக்கு பிரட் ஆம்லேட் அல்லது பிரட் ரோஸ்ட்டை எடுத்துக் கொள்கிறார். இப்படித்தான் கூகுள் சுந்தர்பிச்சையின் தினசரி காலை நேரம் கழிகிறது. ஒரு அக்மார்க் குத்தப்பட்ட ஒரு இந்திய குடிமகன் அதிகாலையில் எழுவது, செய்தித்தாள் வாசிப்பது, அப்படியே டீ, காபி குடிப்பது என்று காலந்தோறும் பழமை மாறாமல் இருக்கும். அப்படித்தான் இன்றைக்கு வரைக்கும் நமது கூகுள் சுந்தர்பிச்சையும் வாழ்ந்து வருகிறார்.