10 கோடி டாலரை இழந்து மனைவி, குழந்தைகளை பராமரிக்கும் தந்தை… நெகிழ்ச்சி சம்பவம்!!!
- IndiaGlitz, [Monday,December 14 2020]
சமைப்பது, குடும்பத்தை பராமரிப்பது போன்ற காரணங்களுக்காக வேலையை விட்ட அம்மாக்களைப் பார்த்து இருப்போம். ஆனால் தனது குழந்தை மற்றும் மனைவியை பராமரிக்க வேண்டி தந்தை ஒருவர் அதுவும் 10 கோடி டாலர் சம்பளத்தை இழந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜெர்மனியில் செயல்படும் ஜலன்டோ எஸ்இ நிறுவனத்தின் இணை தலைமைச் செயல் அதிகாரியாக இருந்துவரும் ரூபின் ரிட்டர் தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார். காரணம் வழக்கறிஞராக இருக்கும் தன்னுடைய மனைவிக்கு துணையாக இருப்பதற்கும் தன்னுடைய குழந்தைகளை பராமரிப்பதற்காகவும் இந்த வேலையை அவர் ராஜினாமா செய்து உள்ளார். இந்த விலகலால் அவருக்கு 11.20 கோடி டாலர் இழப்பீடு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
ஆண், பெண் வேறுபாடு அதிகமாக இருக்கும் ஜெர்மனியில் தன்னுடைய குழந்தை மற்றும் மனைவியைப் பார்த்துக் கொள்வதற்காக 10 கோடி டாலர் தொகையை இழப்பீட்டுடன் விட்டு கொடுத்து இருப்பது பலரது மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் தன்னுடைய வேலை இழப்பதால் நிறுவனம் வழங்கி வந்த ஊக்கத்தொகையை கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இவர் இழந்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக பிரான்ஸ் துணை அதிபர் மியூன்டெபெரிஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது மனைவியை பராமரிக்க வேண்டி பதவி விலகினார். குளோபல் நிறுவனத்தின் அதிகாரியாக வேலைப் பார்த்து வந்த ஆண்ட்ரியால் உட்டர்மான் தனது மனைவியின் தொழில் வளர்ச்சிக்காக வேலையை விட்டார். இந்நிலையில் எப்போதாவது நடக்கும் இதுபோன்ற நெகிழ்ச்சி சம்பங்கள்தான் ஓரளவிற்கு இனவேறுபாட்டை போக்குகிறது எனலாம்.