மனிதர்களை போல இனி மாடுகளுக்கும் ஆதார் கார்டு. மத்திய அரசு ஆலோசனை
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் உள்ளவர்கள் இனி ஆதார் கார்டு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டபோதிலும் ஆதார் கார்டு பல்வேறு விஷயங்களுக்கு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இனி சாலைகளில் நடப்பதற்கு கூட ஆதார் கார்டு கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்த நிலையில் மனிதர்களுக்கு மட்டுமின்றி மாடுகளுக்கும் ஆதார் கார்டு திட்டம் விரைவில் வரவிருக்கின்றதாம். நாடு முழுவதும் உள்ள பசுவை பாதுகாக்கும் வகையில் பசுக்களுக்கும் ஆதார் கார்டு போன்ற அடையாள அட்டை எண் வழங்க வேண்டும் என்று மத்திய அரசின் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள பல மாநிலங்களில் பசுமாடுகள் கடத்தி இறைச்சிக்காக கொல்லப்படுவதாக பல புகார்கள் வந்துள்ளதை அடுத்து பசுக்களை பாதுகாக்க பரிந்துரைகள் தருமாறு மத்திய அரசு சமீபத்தில் கமிட்டி ஒன்றை அளித்தது.
இந்த கமிட்டி பல்வேறு விசாரணைகளுக்கு பின்னர் கொடுத்துள்ள பரிந்துரைகளில் ஒன்றுதான் இந்த அடையாள அட்டை திட்டம். ஆதார் எண் போன்று ஒவ்வொரு மாடுகளுக்கும் ஒரு அடையாள எண் உருவாக்கி அதில் அந்த மாட்டின் பாலினம், வகை, இருக்கும் இடம், எடை, நிறம், வால், தனிப்பட்ட அடையாளம் போன்ற விவரங்களைப் பதிவுசெய்வது என்பதுதான்.
இந்த கமிட்டியின் பரிந்துரைகளை மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்த மத்திய அரசின் முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments