முதல்வருக்கு அடுத்த இடத்தை ரஜினிக்கு கொடுத்த மத்திய அமைச்சர்: பெரும் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
மத்திய அமைச்சர் ஒருவர் தனது ட்வீட்டில் முதல்வருக்கு அடுத்த இடத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கொடுத்து இருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்காரியால் என்பவர் தனது டுவிட்டரில் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் முதலாவது இணை இயக்குனராக ஆர் சந்திரசேகரன் என்பவர் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக தனது டுவிட்டரில் குறிப்பிட்டார். இந்த டுவிட்டில் அவர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்களின் டுவிட்டர் பக்கங்களுக்கு டேக் செய்தார். இதனை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டுவிட்டர் பக்கத்துக்கும் அவர் டேக் செய்துள்ளார். பிரதமர், உள்துறை அமைச்சர், முதல்வர் ஆகிய மூவருக்கு அடுத்த இடத்தை ரஜினிக்கு அவர் கொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் முதல்வருக்கு அடுத்த இடத்தை ரஜினிக்கு மத்திய அமைச்சர் ஒருவர் கொடுத்திருப்பது குறித்து நேற்றே ஒரு சில தொலைக்காட்சிகளில் விவாதங்களும் நடந்தன என்பது குறிப்பிடதக்கது. ரஜினி குறித்து எந்த தகவல் வெளிவந்தாலும் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வரும் நிலையில் இந்த தகவலையும் ரஜினி ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர் என்பதும், வழக்கம்போல் ரஜினியை பிடிக்காதவர்கள் மத்திய அமைச்சருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திரு ஆர். சந்திரசேகரன் அவர்கள் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதலாவது இயக்குனராக பணி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். @narendramodi @AmitShah @CMOTamilNadu@rajinikanth @HRDMinistry @KPAnbalaganoffl @KASengottaiyan
— Dr Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) June 1, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout