கல்லூரிகள் திறப்பது குறித்த மத்திய அமைச்சரின் அதிரடி உத்தரவு!
- IndiaGlitz, [Tuesday,May 05 2020]
நாடு முழுவதும் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பள்ளி கல்லூரி மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வு உட்பட பல தேர்வுகள் பள்ளி அளவில் நடை பெறவில்லை என்பதும் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் இன்னும் நடைபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
மேலும் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை என்பதால் அடுத்த ஆண்டுக்கான கல்லூரி மாணவர்கள் சேர்க்கை நடைபெறாமல் உள்ளது. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை திறக்க மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளார்
கல்லூரிகள் திறந்தவுடன் முதல் கட்டமாக செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்றும் அதன் பின்னர் மாணவர்களுக்கு வழக்கமான வகுப்புகள் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புதிய மாணவர்கள் சேர்க்கை ஆகஸ்ட் மாதம் தொடங்கி அவர்களுக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்றும் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மே மாதம் என்பதால் மே ஜூன், ஜூலை ஆகிய மூன்று மாதங்களுக்குள் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி கல்லூரிகளைத் திறக்க மத்திய அமைச்சர் உத்தரவு பிறப்பித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது