நீட் தேர்வு எப்போது? தேதியை அறிவித்த மத்திய கல்வி அமைச்சர்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மற்றும் அனைத்து மாநிலங்களிலும் 12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் நீட் தேர்வும் ரத்து செய்யப்பட வேண்டும் என தமிழகம் உள்பட பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன. ஆனால் சமீபத்தில் ஜே.ஈ.ஈ தேர்வு தேதியை அறிவித்த மத்திய அரசு தற்போது நீட் தேர்வுக்கான தேதியையும் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் நாளை மாலை 5 மணி முதல் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த ஆண்டு நீட் தேர்வு உண்டு என்பது உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில் தமிழக அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் இது குறித்து கருத்து கூறிய போது ‘நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் திமுக அரசின் கொள்கை என்றும் நீட்தேர்வு ஆய்வு குழு தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது என்றும் மாணவர்களை நீட் தேர்வுக்கு தயார் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராவதில் தவறு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout