சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி: தமிழ் தொலைக்காட்சிக்கு நோட்டீஸ் அனுப்பிய மத்திய அரசு!

  • IndiaGlitz, [Monday,January 17 2022]

பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய காட்சிகள் அடங்கிய நிகழ்ச்சியை ஒளிபரப்பிய பிரபல தமிழ் சேனலுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பிரபல தமிழ் சேனல் ஒன்றில் நேற்றுமுன்தினம் ஒளிபரப்பான ஜூனியர் சூப்பர்ஸ்டார் என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக கருத்து கூறப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு புகார்கள் எழுந்தன. இதுகுறித்து மத்திய அமைச்சர் எல்.முருகனிடம் புகார் அளித்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் தனது டுவிட்டரில் கூறியிருந்தார்

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகம் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 15ஆம் தேதி ஒளிபரப்பான ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி குறித்து புகார் வந்துள்ளதாகவும் இந்த புகார் குறித்து 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் இல்லையேல் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.