அக்டோபர் 1 முதல் திரையரங்குகள் திறக்கப்படுகிறதா? மத்திய அரசு விளக்கம்
- IndiaGlitz, [Monday,September 14 2020]
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும், ஆனால் அதே நேரத்தில் கடந்த இரண்டு மாதங்களாக ஒருசில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் கிட்டத்தட்ட நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்பி விட்டது என்பதும் தெரிந்ததே.
பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் தவிர கிட்டத்தட்ட அனைத்தும் திறக்கப்பட்டு விட்ட நிலையில் திரையரங்குகள் திறக்கப்படுவது குறித்து சமீபத்தில் மத்திய அரசு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தது
இந்த ஆலோசனைக்கு பின்னர் அக்டோபர் 1ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் சற்றுமுன் வெளியான தகவலின்படி திரையரங்குகளை மீண்டும் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும் அக்டோபர் 1-ல் தியேட்டர்கள் திறக்கப்படும் என்று வெளியான தகவல் தவறானது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது