நீட் தேர்வு: சி.பி.எஸ்.இ-க்குக் ஆப்பு வைத்த மத்திய அரசு
- IndiaGlitz, [Tuesday,June 12 2018]
மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வை சி.பி.எஸ்.இ அமைப்பு நடத்தி வந்த நிலையில் இனிமேல் இந்த தேர்வை சி.பி.எஸ்.இ நடத்தாது என்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு நீட் தேர்வை நடத்திய சி.பி.எஸ்.இ பல்வேறு குளறுபடிகளை செய்தது. குறிப்பாக இந்தியாவிலேயே தமிழக மாணவர்களை மட்டும் வெளிமாநிலங்களில் தேர்வு மையத்தை அறிவித்தது. அதிலும் ராஜஸ்தான் போன்ற தொலைதூர மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதும் நிலை தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டது. இது சி.பி.எஸ்.இ அமைப்பின் கவனக்குறையே என்று சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு சி.பி.எஸ்.இ நடந்து கொண்டது.
மேலும் கேள்வித்தாளை தமிழில் மொழிபெயர்ப்பதிலும் பல தவறுகள் இருந்ததால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இனி வரும் ஆண்டில் இருந்து நீட் தேர்வை சி.பி.எஸ்.இ அமைப்பு நடத்தாது என்றும், இந்த தேர்வை இனி தேசிய தேர்வு முகமைதான் நடத்தும் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.