தமிழக அரசின் அவசர சட்டத்தில் காளைகள் நீக்கும் சட்டப்பிரிவு சேர்ப்பு

  • IndiaGlitz, [Saturday,January 21 2017]

ஜல்லிக்கட்டுக்காக தற்போது இயற்றப்படவுள்ள அவசர சட்டம் நிரந்தர தீர்வு ஆகாது என்றும் இந்த வருடம் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த உதவும் என்றும், எனவே நிரந்தர தீர்வு பெறும் வகையில் காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகள் நீக்கப்படும் வரை போராட்டம் நீடிக்கும் என்றும் போராட்டக்காரர்களின் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசு இயற்றவுள்ள அவசர சட்டத்தில் தற்போது புதியதாக காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகள் நீக்கும் சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளதாக பிடிஐ தகவல் வெளியிட்டுள்ளது.

எனவே தமிழக அரசின் இந்த சட்டம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான நிரந்தர தீர்வு என்று கூறப்படுகிறது. இந்த வெற்றி அனைத்துமே மெரீனா உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த 5 நாட்களாக போராடி வரும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கே சேரும் என்பது குறிப்பிடத்தக்க்கது.