மே 3 வரையிலான ஊரடங்கின் வழிகாட்டுதல் நெறிமுறைகள்: மத்திய அரசு அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என நேற்று பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் நாட்டு மக்களிடையே உரையாற்றும்போது தெரிவித்தார். இந்த நிலையில் இந்த 2ம் கட்ட ஊரடங்கு குறித்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இதன் விபரங்கள் பின்வருமாறு:
* வரும் 20ந் தேதிக்கு பிறகு மக்கள் நெருக்கம் குறைவான தொலைதூரப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் இயங்க அனுமதி
* கட்டுமானப்பணிகள் நடைபெறவும் மத்திய அரசு அனுமதி
* வேளாண் தொடர்புடைய அனைத்து பணிகளையும் தொடங்க அனுமதி
* அனைத்து கல்வி நிலையங்கள், பொது போக்குவரத்து சேவைகள் இயங்க தடை
* அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் அரசு அலுவலகங்கள் மட்டும் இயங்க அனுமதி
* ஏப்ரல் 20இல் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம். ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்
* ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின் பிளம்பர், எலெக்ட்ரீஷியன், தச்சுவேலை, மோட்டார் மெக்கானிக் தொழில் செய்வோர் செயல்பட அனுமதி
* ஏப்ரல் 20ஆம் தேதி முதல் சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் பணிகளை தொடரலாம். முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும்
* ஏப்ரல் 20 முதல் விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத் தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி
* ஏப்ரல் 20க்கு பின் ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் வேலைக்கு செல்லலாம். ஆனால் மாஸ்க் அணிவது கட்டாயம்
இவ்வாறு மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு குறித்த நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments