திரைப்பட படப்பிடிப்பு குறித்து மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு: திரையுலகினர் குஷி!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. தற்போது நடைபெற்று வரும் 7ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கில் ஒருசில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து கடைகள், கோவில்கள் திறக்க அனுமதிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. இருப்பினும் திரையரங்குகள் திறக்கவும், திரைப்பட படப்பிடிப்பு நடத்தவும் மட்டும் அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில் சற்று முன்பு திரைப்பட படப்பிடிப்புகளை நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதித்து, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. சினிமா படப்பிடிப்புகள் மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகள் நடத்த அனுமதிக்கப்படுவதாக மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சக பிரகாஷ் ஜவதேகர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் குறைந்த அளவு பணியாளர்களை கொண்டு படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றும் படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்றும் எச்சில் துப்பக் கூடாது என்று மத்திய அரசு தனது வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவித்துள்ளது.

More News

போனிகபூரின் அடுத்த தமிழ்ப்படம்: ஹீரோ, இயக்குனர் அறிவிப்பு

பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளராகிய போனிகபூர், முதன் முதலாக அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' என்ற திரைப்படத்தை தயாரித்தார் என்பதும்,

விநாயகர் சதுர்த்தி தினத்தில் அஜித்துக்கு நன்றி கூறிய ராகவா லாரன்ஸ்: ஏன் தெரியுமா?

நேற்று உலகம் முழுவதும் இந்து மக்களால் விநாயகர் சதுர்த்தி தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது என்பதும் உள்ளூர் தலைவர்கள் முதல் அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் வரை இந்து மத மக்களுக்கு

ஆங்கிலம் தெரியாதவர் எதற்கு பாடம் நடத்துகிறார்? விஜயகாந்த் ஆவேசம்

சமீபத்தில் ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் யோகா ஆன்லைன் வகுப்பு நடைபெற்றபோது அதில் கலந்து கொண்ட தமிழ் மருத்துவர்கள், ஆயுஷ் செயலர் ராஜேஷ் கொடேஜாவிடம் தங்களுக்கு

அமெரிக்கா, இங்கிலாந்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை: எஸ்பிபி குறித்த லேட்டஸ்ட் அறிக்கை

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் ஆகஸ்ட் 5ம் தேதி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

சக பயணிக்கு பிசினஸ் கிளாஸை விட்டு கொடுத்த தல தோனி: வைரலாகும் வீடியோ

கிரிக்கெட் விளையாட்டில் பல்வேறு சாதனைகள் படைத்த தல தோனி அவர்கள் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்தவுடன் சமூக வலைதளமே ஸ்தம்பித்தது