திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதி: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரப்ப வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது
இந்த நிபந்தனையின்படி சமீபத்தில் வெளியான ’மாஸ்டர்’ மற்றும் ‘ஈஸ்வரன்’ உள்பட பல திரைப்படங்களின் ரிலீஸின்போது திரையரங்குகளில் 50% இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த வகையில் சமீபத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக திரையரங்குகளில் பார்வையாளர்கள் அமர்ந்து திரைப்படங்களைப் பார்க்க அனுமதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்த நிலையில் தற்போது மத்திய அரசு பிறப்பித்த உத்தரவின்படி நாளை முதல் அதாவது பிப்ரவரி 1 முதல் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளில் பார்வையாளர்கள் அமர்ந்து திரைப்படம் பார்க்க அனுமதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த உத்தரவின் காரணமாக நாளை முதல் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் அதே நேரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை திரையரங்கு உரிமையாளர்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout